bethelministries.org.uk

JesusTomb-1200x760

“Christ Lives” Is Always

உயிர்த்தார்… உயிர்த்தார்… கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்…!” என்ற கீதம்

முழங்க மன்னவர் இயேசு உயிர்த்தெழுந்தார்.பரமன் இயேசு, தாம் வாக்களித்தபடியே மரித்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த நன்னாளை இன்று கிறிஸ்தவ உலகமே விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கின்றது.

கிறிஸ்தவ வாழ்வுக்கு அடித்தளமான இருந்து அர்த்தம் தருவது கிறிஸ்துவின் உயிர்ப்பு தானே கிறிஸ்துவின் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும் (1கொரி 15, 14) மீட்பின் வரலாற்றின் மணிமகுடம் கிறிஸ்துவின் உயிர்ப்பு அதுவே நமது விசுவாச வாழ்வின் அடித்தளமும் கூட.

இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய வேதக்  குறிப்புகள் பல உள்ளன. அவற்றில் ஒரு சில: யோவான் 19:30-31மாற்கு 16:1; 16:6. இயேசு இறந்து கல்லறையில் அடக்கப்பட்ட மூன்றாம் நாள் விடியற்காலையில் பெண்கள் சிலர் அவருடைய உடலில் பூசுவதற்கென நறுமணப் பொருட்களைக் கொண்டுசென்ற போது கல்லறையை மூடியிருந்த கல் புரட்டப்பட்டு, கல்லறை வெறுமையாய் இருக்கக் கண்டார்கள் (மத்தேயு 28:1-7மாற்கு 16:1-8லூக்கா 24:1-12யோவான் 20:1-12). சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுந்த இயேசு நாற்பது நாள்கள் தம் சீடருக்குத் தோன்றினார் ( அப்போஸ்தலர்  1:3);
மரணத்தை வென்ற இயேசுவின் உயிர்ப்பு மானிடர் அனைவருக்கும் மீட்பளிக்கின்றது.
இயேசுவின் மரித்த திருவுடலை சிலுவையினின்றும் இறக்கி அன்னை மரியாளின் மடியில் கிடத்தினர். பின்னர் அருகிலிருந்த கல்லறை ஒன்றில் அவரை அடக்கம் செய்தனர். அந்தக் கல்லறைமீது பெரிய பாறைக்கல் ஒன்றையும் வைத்துவிட்டு உறவினர்களும் சீடரும் சென்றுவிட்டனர்.
அதேவேளை கல்லறையை இரு போர் வீரர்கள் காவல் காக்கவும் தவறவில்லை.மறுநாட் காலை பரிமளத் தைலங்களுடன் மரியாள் தன் சீடர்களுடனும் உறவினர்களுடனும்; கல்லறையில் கிறிஸ்துவின் உடலைத் தேடினார். ஆனால்… அங்கே கிறிஸ்துவில் உடல் இருக்கவில்லை.
கல்லறையை மூடி வைத்திருந்த பாறைக் கல் அகற்றப்பட்டு கல்லறை வெறுமையாக இருந்தது. அவர்கள் அதிசயப்பட்டுத் தங்களுக்குள் கதைத்துக் கொண்டனர்.
அப்போது கல்லறையின் தலைமாட்டில் மின்னலைப் போன்று ஆடையணிந்த வான தூதர்கள் இருவர் இருக்க கண்டு ஆச்சரியமடைந்த வேளை,”உயிரோடு இருப்பவரை கல்லறையில் தேடுவதேன்? கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் அன்று கூறியதை நினைவுப்படுத்திப் பாருங்கள்” என்று கூறினர். சிறு பொழுதில் வானதூதர் மறைந்தனர்.
ஆம். கிறிஸ்து, நம் மத்தியில் இன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

இயேசு கிறிஸ்து முன்னுரைத்தப்படி தாம் சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததனையே கிறிஸ்தவர்கள் இன்று உயிர்த்த ஞாயிறு பண்டிகையைாக கொண்டாடுகின்றனர்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உலக மக்களின் பாவங்களை சுமந்த மனுக்குமாரன் இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் தன் இன்னுயிர் இரட்சிப்பின் மேன்மை கருதி தியாகம் செய்தார்.

தாம் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில் மரணத்திலிருந்து ஜெயித்ததன் மூலமாய் மனிதகுலத்திற்கு புதிய விடுதலையை பெற்றுக்கொடுத்த நாளாக இன்றைய நாள் கருதப்படுகிறது.

இயேசு உயிர்த்து விட்டார். நாம் எப்போது பாவ வாழ்விலிருந்து உயிர்த்தெழப் போகிறோம்?

Come and Visit!

Mitcham Parish Church
Church Road
Mitcham - CR4 3BN
Tel: +44 208 39 100 40
Tel: +44 78 88836 144

Get Directions