bethelministries.org.uk

7th anniversary

எழாவது ஆண்டு நிறைவு

பெத்தேல் மிசனரி சர்ச் ஆனது ஸ்தாபிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு 07.10.2012 தொடக்கம் 14.10.2012 வரை

இந்த எழு ஆண்டுகளை கடந்து வர தேவன் கிருபை செய்தபடியால் அதற்கு நன்றி செலுத்துமுகமாக ஏழாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதில் மேசியா ஊழியங்களின் போதகர் செல்வகுமார் அவர்களும், சுவிசேசகர் டாக்டர் ரத்னம் பவுல்(Fort of praise ministries) அவர்களும், இன்னும் பல சபை போதகர்களும் கலந்து கொண்டு இந் நிகழ்வுகளை சிறப்பித்தார்கள். மேலும் பல நிகழ்ச்சிகளோடும் இந் நிகழ்வு கொண்ட்டாடப்பட்டது. கர்த்தரின் கிருபையால் இச் சபையானது தனது கிளைகளை பரப்பி ஆலமரமாக வளர்ந்து பெருகி நிற்கிறது. இச் சபையானது பதின்ஏழு விசுவாசிகளோடு ஆரம்பிக்கபட்டு தற்பொழுது 300 கும் அதிகமான விசுவாசிகளையும், நான்கு சிறார்களோடு ஆரம்பிக்கப்பட்ட ஞாயிறு பள்ளி ஆராதனையானது தற்பொழுது அறுபதிற்கும் அதிகமான சிறார்களாக வளர்ந்து பெருகியுள்ளது. ஏர்டிங் என்னும் பட்டணத்திலும் இலங்கையில் உள்ள திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம், மற்றும் வேலணை ஆகிய இடங்களிலும் தனது கிளைகளை பரப்பி தேவனுடய ஊழியத்தை செய்து வருகிறது. எமது போதகரை கர்த்தர் உலகமெங்கும் கொண்டு சென்று வேத கலாசாலைகளில் கருத்தரங்குகளும், குறிப்பாக வலிபப்பிள்ளகள் மத்தியில் கூட்டங்களை நடத்தி அவர்கள் மத்தியில் எழுப்புதல் உருவாகவும் தேவன் வல்லமையாக பயன்படுத்தி வருகிறார்.

Come and Visit!

Mitcham Parish Church
Church Road
Mitcham - CR4 3BN
Tel: +44 208 39 100 40
Tel: +44 78 88836 144

Get Directions